அச்சக உரிமையாளர்கள் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு அச்சக உரிமையாளர்கள் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மூலப்பொருட்களின் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளதை கண்டித்தும், ஜி.எஸ்.டி வரியை குறைக்க வலியுறுத்தியும் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். இதற்கு பொதுச் செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். மேலும் இந்த போராட்டத்தில் பொருளாளர் சுபாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.