Categories
தேசிய செய்திகள்

ஜி.பி.எஸ் முறையில் சுங்கக் கட்டணம் வசூலிப்பது எப்போது?…. வெளியான தகவல்….!!!!

ஜிபிஎஸ் முறையில் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை ஜனவரியில் நடைமுறைபடுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டு இருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்க தமிழகத்தில் 54 இடங்கள் உள்பட நாடு முழுவதும் 805 இடங்களில் சுங்கச் சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ளன. பணம் இல்லாத பரிவர்த்தனை அடிப்படையில் சுங்கக்கட்டணம் வசூலிக்க “பாஸ்டேக்” திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதற்கென தேசிய மற்றும் தனியார் வங்கிகள் பணப்பரிமாற்ற வங்கிகள் மூலம் பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. வாகனங்களின் முன் பக்க கண்ணாடியில் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.

அதே நேரம் வாகனங்கள் போகும் போது சுங்கச்சாவடிகளிலுள்ள மின்னணு கருவியின் மூலம், வங்கக்கணக்கிலிருந்து கட்டணம் கழித்துகொள்ளப்படுகிறது. இதன் மூலம் வாகனங்கள் காத்திருப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் வாகனங்களின் காத்திருப்பானது தொடர்கிறது. இதற்கிடையில் பாஸ்டேக் நடைமுறை தோல்வியடைந்து இருப்பதால், வெளிநாடுகளில் உள்ளதுபோல ஜிபிஎஸ் முறையில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. இதற்கென சுங்கச் சாவடிகளின் அருகே கண்காணிப்பு கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்படவுள்ளது. வாகனங்கள் சுங்கச் சாவடிகளை கடக்கும் சமயத்தில் ஜிபிஎஸ் கருவியின் மூலம் அடையாளம் காணப்பட்டு சுங்கக் கட்டணம் வங்கிக்கணக்குகளிலிருந்து கழித்துகொள்ளப்படவுள்ளது.

இவற்றில் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது. சுங்கக்கட்டணம் செலுத்தாமல் வாகனங்கள் போகவும் அதிக வாய்ப்புள்ளது. எனினும் சோதனை முறையில் அடுத்த வருடம் ஜனவரியில் இத்திட்டத்தை பல சுங்கச்சாவடிகளில் செயல்படுத்த, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்து இருக்கிறது. இதற்கென தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, சேலம் மாவட்டங்களில் உள்ள 10 சுங்கச் சாவடிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |