ஜி.பி.முத்து பிக்பாஸில் கலந்துகொள்வது குறித்து நடிகர் சதீஷ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் இந்த சீசனில் யார் யாரெல்லாம் போட்டியாளராக கலந்து கொள்வார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே டிக்டாக் மூலம் பிரபலமடைந்த ஜி.பி.முத்து பிக்பாஸ் வீட்டின் முன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Ulla task letter a mattum padikka vitraadhingappa….
Ennada task kudukkuringa… Setha payaluvala… Naara payaluvala…. https://t.co/NYvVqf5wW1— Sathish (@actorsathish) September 3, 2021
இந்நிலையில் இது குறித்து பிரபல காமெடி நடிகர் சதீஷ் நகைச்சுவையாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘உள்ள டாஸ்க் லெட்டர மட்டும் படிக்க விட்ராதீங்கப்பா. என்னடா டாஸ்க் கொடுக்குறீங்க. செத்த பயலுவளா.. நாற பயலுவளா’ என பதிவிட்டுள்ளார் . தற்போது அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.