கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் செல்போன் உபயோகப்படுத்துகின்றனர். இந்த சூழலைப் பயன்படுத்தி பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் அப்பாவி மாணவர்களின் மனதை மாற்றி, அவர்களை ஆபாச இணையதளங்களுக்கு அடிமையாக்கி பணம் சம்பாதிக்கும் குழுக்கள் இயங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் இணையத்தில் ஆபாசமாக பேசி வரும் ஜி.பி முத்து, ரவுடி பேபி சூர்யா, திவ்யா உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுத்து அவர்களின் சமூக வலைதளப் பக்கங்கள் மூடப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பு முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதனால் ஆன்லைன் வகுப்புக்காக இணையதளத்தை பயன்படுத்தும் போது இதுபோன்ற வீடியோக்களை மாணவர்கள் பார்க்க நேரிடும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.