“காம்ப்ளக்ஸ்” திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “கத்திக்கூவுது காதல்” என்ற பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் “காம்ப்ளக்ஸ்” என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தை மந்த்ரா வீரபாண்டியன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஆடுகளம் நரேன், வெங்கட் செங்குட்டுவன், இவானா மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதனை அடுத்து கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஜி.எஸ் சினிமா நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள “கத்தி கூவுது காதல்” என்ற பாடல் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இந்தத் திரைப்படத்தில் ஞானகரவேல் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் அனைவரையும் கவர்ந்து ஈர்த்துள்ளது. மேலும் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அவரது மனைவி சைந்தவி இணைந்து பாடிய பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.