இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக தற்போது ஹிட் கொடுத்து வரும் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான “பேச்சுலர்” படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது கௌதம் மேனன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் செல்ஃபி படம் வெளியாகியுள்ளது. சங்கிலி முருகன், வாகை சந்திரசேகர், வர்ஷா பொல்லம்மா, தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளனர். நடிகை வித்யா, கௌதம் மேனனின் மனைவியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த செல்ஃபி படம் மெடிக்கல் காலேஜ் மற்றும் இஞ்சினியரிங் காலேஜில் மாணவர்களை சேர்ப்பதற்கு பின்னால் நடக்கும் தில்லு முல்லு, பிள்ளைகளை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் பெற்றோர்களை புரோக்கர்கள் எந்த அளவுக்கு பயன்படுத்துகிறார்கள், தற்போது ஒரு மெடிக்கல் சீட்டிற்கு எந்த அளவுக்கு மதிப்பு உள்ளது என்பதை உணர்த்தும் விதமாக இந்த படம் உள்ளது. எனவே தமிழ் சினிமாவில் செல்ஃபி படம் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.