Categories
உலக செய்திகள்

ஜி-20 மாநாடு நடைபெறும் ஓட்டலுக்கு…. பிரதமர் மோடி வருகை….. பிரபல நாட்டு அதிபர் வரவேற்பு….!!!!

ஜி-20 மாநாடு நடைபெறும் பாலி நகரிலுள்ள அபூர்வா கெம்பிஸ்னிகி ஓட்டலுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை இந்தோனேசிய அதிபர்  வரவேற்றார்.

இந்தோனேசியா நாட்டில் பாலி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில்  ஜி-20 உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து நேற்று புறப்பட்டு பாலி நகருக்கு சென்றுள்ளார். இந்த மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம், சுகாதாரம் போன்ற மூன்று முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்கின்றார். இதனை முன்னிட்டு அவரது 3 நாள் பயணத்திற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “ஜி-20 தலைவர்களுடன் வளர்ந்து வரும் உலகளாவிய வளர்ச்சி, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் உருமாற்றம் உள்ளிட்ட பல முக்கிய சர்வதேச விவகாரங்கள் பற்றி விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, இதில் கலந்து கொள்ளும் பல நாட்டு தலைவர்களையும் நான் நேரில் சந்தித்து பேசவுள்ளேன். இந்தியாவுடனான இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிகள் பற்றி அவர்களுடன் மறுஆய்வு செய்யப்படும்.
அதன்பின், பாலியில் நடைபெற கூடிய வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய சமூக மக்களிடையே உரையாற்ற இருக்கிறேன். மேலும்ஜி-20 மாநாட்டின் நிறைவு நிகழ்வாக ஜி-20 அமைப்பின் தலைமைத்துவம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். இதனை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, இந்தியாவிடம் ஒப்படைக்கவுள்ளார்.

நமது நாட்டுக்கும் மற்றும் மக்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தருணம்” என்று பிரதமர் மோடி பாலிக்கு புறப்படும் முன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, ஜி-20 மாநாடு நடைபெறும் பாலி நகரிலுள்ள அபூர்வா கெம்பிஸ்னிகி ஓட்டலுக்கு இன்று பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். அவரை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ வரவேற்றுள்ளார். இந்த மாநாட்டில் பிரதமர் மோடியுடன் மத்திய வெளிவிவகார மந்திரி எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் ஜி-20 இந்திய குழுவின் தலைவர் அமிதாப் கந்த் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர். இதற்காக மாநாட்டில் பங்கேற்க அவர்களும் பாலி நகரிலுள்ள ஓட்டலுக்கு வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |