இந்தோனேசியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் அதிபர் புதின் கலந்து கொள்ள மாட்டார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சுற்றுலா தலங்களில் ஒன்றான இந்தோனேஷியாவின் பாலி நகரில் நவம்பர் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் ஜி 20 மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் போன்றோர் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் ரஷ்ய தூதரகம் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நடைபெற உள்ள ஜி-20 தலைவர்களின் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினுக்கு பதிலாக, ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லவ்ரோவ் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி புதின் கூறியதாவது, நான் பாலிக்கு செல்ல வேண்டுமா என்பது பற்றி முடிவு செய்யப்படவில்லை. ஆனால் ஒருவேளை செல்லாவிட்டாலும் உயர்மட்ட ரஷ்ய தூது குழு அங்கு செல்லும் என கூறியுள்ளார்.