ஜெர்மனியிலுள்ள எல்மா என்ற இடத்தில் ஜி7 மாநாடு நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான், கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 7 நாடுகளின் அதிபர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாடு 2 தினங்கள் நடைபெறும். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் எல்மாவ் பகுதிக்கும், இந்தியாவுக்கும் இடையில் ஒரு அழகான ஒற்றுமை இருக்கிறது. அதாவது எல்மாவ்வில் கடந்த 1914-ஆம் ஆண்டு முதல் 1916-ம் ஆண்டு வரை ஜோகன்னஸ் முல்லர் என்பவரால் ஒரு ஆடம்பரமான கோட்டை கட்டப்பட்டுள்ளது.
இந்த கோட்டையானது பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கு பிறகு கடந்த 1961-ம் ஆண்டு முல்லரின் பிள்ளைகளுக்கு சொந்தமானது. இந்த ஆடம்பர நட்சத்திர விடுதிக்கு தற்போது டயட்மர் முல்லர் உரிமையாளராக இருக்கிறார். இவர் ஜி-7 உச்சி மாநாட்டிற்காக தன்னுடைய ஆடம்பர நட்சத்திர கோட்டையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பிரம்மாண்டமான நட்சத்திர விடுதியை கட்டினார். இந்த நட்சத்திர விடுதியில் தான் தற்போது வரை உலகத் தலைவர்கள் கூடி மாநாட்டை நடத்துகின்றனர். இங்கு விநாயகப் பெருமானின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. ஏனெனில் டயட்மர் முல்லர் தன்னுடைய இளமை பருவத்தில் இந்தியாவில் வாழ்ந்தார்.
அவர் பல்வேறு தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, தொழில்நுட்பத் துறையில் அதிக அளவில் முதலீடு செய்தார். இவர் இந்தியாவில் தனிநபர் சுதந்திரமானது மிக முக்கியமானது என்று ஒரு பேட்டியில் கூறினார். இவருக்கு இந்தியாவின் மீது அதிகமான பற்று இருக்கிறது. இதன் காரணமாகத்தான் அவருடைய நட்சத்திர விடுதியில் இந்திய கலை பாணியில் செய்யப்பட்ட நாற்காலிகள், மேஜைகள் போன்ற மரச் சாமான்களை வைத்துள்ளார். இந்த ஆடம்பர நட்சத்திர விடுதியில் 115 அறைகள் இருப்பதோடு, இந்திய இசை கச்சேரி, யோகா உள்ளிட்ட இந்தியா கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பல சிறப்பம்சங்களும் இருக்கிறது.