Categories
தேசிய செய்திகள்

ஜீன்ஸ் அணிய தடை….. கண்டிஷன் போட்ட கணவன்….. ஆத்திரத்தில் மனைவி செய்த கொடூர சம்பவம்….!!!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் திருமணத்திற்கு பிறகு ஜீன்ஸ் அணிவதற்கு தடை விதித்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்கண்டின் மாநிலம் ஜோர்பிதா கிராமத்தை சேர்ந்தவர்கள் கர்ணேஷ்வர் டுடு, புஷ்பா ஹெம்பிரம் தம்பதி.  சம்பவ தினத்தன்று ஜீன்ஸ் அணிந்து கொண்டு புஷ்பா கோலால்பூர் கிராமத்தில் நடந்த கண்காட்சிக்கு சென்றுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பிய புஷ்பாவை ஜீன்ஸ் உடையில் பார்த்த கணவர் அது பற்றி கேள்வி கேட்டுள்ளார். திருமணத்திற்கு பின்னர் ஜீன்ஸ் உடையெல்லாம் அணிய வேண்டாம் என மனைவியிடம் அவர் கூறியுள்ளார். ஆனால் அவர் அதனை கவனத்தில் கொள்ளாமல் தொடர்ந்து ஜீன்ஸ் அணிவதில் விடாப்படியாக இருந்தார்.

இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இரண்டு பேரும் சமரசம் செய்யவில்லை. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்தபுஷ்பா, தனது கணவரை கத்தியால் குத்தியுள்ளார்.  இந்த சம்பவத்தில் கணவர் கர்ணேஷ்வர் படுகாயம் அடைந்துள்ளார். அதன் பிறகு அவரை மீட்டு அருகில் உள்ள டன் பாத் நகரில் உள்ள மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் சேர்த்தனர். பின்னர் கர்ணேஷ்வர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |