நாம் சிறுவயதில் இருந்த போதும் சரி, இப்போதும் சரி ஜீன்ஸ் பேண்ட் மட்டும் ட்ரெண்டிங்கில் இருந்து மாறாமல் அப்படியே உள்ளது. இன்றும் ஜீன்ஸ் பேண்ட் பயன்படுத்துபவர்கள் அதிகமாக உள்ளனர். ஒரு காலத்தில் ஜீன்ஸ் பேண்ட் பணக்காரர்களின் ஆடையாக இருந்தது. தற்போது அனைத்து தரப்பு மக்களும் இந்த ஆடையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஜீன்ஸ் பேண்டில் ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அதில் ஒரு சிறிய பாக்கெட் இருக்கும். அந்த மிகச் சிறிய அளவில் அந்த பாக்கெட் வேறு எந்த வகையான பேண்டிலும் இருக்காது. ஆனால் இந்த பாக்கெட்டுக்கு பின்னால் ஒரு வரலாறே உள்ளது.
பெரும்பாலும் சுரங்கங்களில் பணியாற்றும் மக்கள் கடினமான ஆடையை அணிய வேண்டும் என்பதற்காக இந்த ஜீன்ஸ் பேன்ட்டை அணிந்து வந்தனர். அந்த காலத்தில் பாக்கெட் கடிகாரம் மிகவும் பிரபலமாக இருந்தது. மக்கள் இந்த பாக்கெட் கடிகாரங்களை வாங்கி வைத்துக்கொள்வார்கள். அவர்களுக்கு எப்போதெல்லாம் மணி பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறதோ? அப்போது எடுத்து பார்த்துக் கொள்வார்கள். அதிலும் சுரங்கப் பணியாளர்கள் கட்டாயம் வைத்திருப்பார்கள்.
அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை இடைவெளி எடுக்க வேண்டும் என்பதற்காக அந்த கடிகாரத்தை அவர்கள் பயன்படுத்தி வந்தனர். இதற்காக ஜீன்ஸ் பேண்டில் இந்த சிறிய அளவிலான பாக்கெட் வைக்கப்பட்டது. இதனை வாட்ச் பாக்கெட் என்று அழைத்தார்கள். ஆனால் தற்போது இருப்பவர்கள் இதனை சில்லறை வைக்கவும், டிக்கெட்டுகளை பத்திரமாக வைக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.