நம் உடலில் ஜீரண சக்தியை அதிகரிக்கும் பங்கு இஞ்சிக்கு அதிகம் உண்டு. இதை ஜூஸ் ஆகவும் குடிக்கலாம், இப்படி துவையலாக வைத்து சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும்..
தேவையான பொருட்கள்:
மிளகாய் – 5
இஞ்சி – ஒரு விரல் அளவு
வடவம் – ஒரு ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
புளி – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
இஞ்சியை தோல் சீவி கழுவி தேவைக்கேற்ப அறிந்துகொள்ளவேண்டும். வர மிளகாய், உளுத்தம்பருப்பு, வடவம், ஆகியவற்றை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து வைக்கவும். பின்பு வறுத்த உளுத்தம்பருப்பு, வடவம், மிளகாய் ,இஞ்சி ,புளி, உப்புடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பின் வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி. துவையலை போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும். பின் மிதமான சூட்டில் பரிமாறவும். அருமையான இஞ்சி துவையல் தயார். இதை நீர் விட்டு தாளித்து கொண்டு சட்னியாகவும் இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிடலாம்..