ஜிவி பிரகாஷுக்கு வரி செலுத்த கூறிய ஆணைக்கு கேள்வி எழுப்பியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்
நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார் அவரது அனைத்துப் படைப்புகளின் காப்புரிமை படத்தின் தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதன் காரணமாக ரூபாய் ஒரு கோடியே 84 லட்சம் வரியாகச் செலுத்துமாறு ஜிஎஸ்டி இயக்குனர் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜிவி பிரகாஷ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் அவர்கள் ஜிவி பிரகாஷ்குமார் தொடுத்த வழக்கிற்கு பதிலளிக்கும்படி ஜிஎஸ்டி துறைக்கு உத்தரவு பிறப்பித்து விசாரணையை காலம் தள்ளி வைத்துள்ளார்.