ஜீவி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் கடந்த 2019-ஆம் ஆண்டு வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில் வெற்றி நடிப்பில் வெளியான திரைப்படம் ஜீவி. இந்த படத்தில் மோனிகா, கருணாகரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில் ஜீவி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முதல் பாகத்தில் நடித்த வெற்றி தான் ‘ஜீவி-2’ படத்திலும் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.
Just heard a brilliant worthy sequel to #jiivi. Gonna be another 🔼🔼🔼 theory with more punch. Amazingly conceived @Vjgopinath1 👌👌 #jiivi2 will be a good one for the team 👍 @act_vetri @sureshkamatchi pic.twitter.com/erbw83zF8Q
— Editor PraveenKl (@Cinemainmygenes) October 8, 2021
சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தில் பிரவீன்.கே.எல் எடிட்டராக பணிபுரிய உள்ளார். மேலும் இதுகுறித்து எடிட்டர் பிரவீன்.கே.எல். தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஜீவி படத்தின் தொடர்ச்சியாக அற்புதமான ஒரு கதையை கேட்டேன். அதிக அழுத்தத்துடன் மற்றுமொரு முக்கோண விதி. ஜீவி -2 குழுவினருக்கு இது சிறப்பான படமாக அமையும்’ என தெரிவித்துள்ளார். விரைவில் இந்த படம் குறித்த அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .