Categories
தேசிய செய்திகள்

ஜூன் மாதம் 8 நாட்கள் வங்கிகள் இயங்காது…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

ஜூன் மாதத்தில் 8 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அவ்வாறு விடுமுறை நாட்களின் பட்டியல் வாடிக்கையாளர்களின் வசதிக்காக முன்னரே வெளியிடப்படும். அதன்படி ஜூன் மாதம் எட்டு நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டு இருக்கும் என ரிசர்வ் வங்கி பட்டியலை வெளியிட்டுள்ளது. வங்கிகள் பொதுமக்களின் வசதிக்காக அத்தியாவசிய சேவைகளை வழங்கி வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் அனைத்திற்கும் வங்கி சேவை மிக முக்கியமானதாக உள்ளது. அதனால் விடுமுறையை கணக்கில் கொண்டு வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான சேவைகளை முன்னரே திட்டமிட்டுக் கொள்வது நல்லது.

ஜூன் 2022 இல் விடுமுறை நாட்களின் பட்டியல்:

ஜூன் 2: மகாராணா பிரதாப் ஜெயந்தி, ஷில்லாங்
ஜூன் 5: ஞாயிறு
ஜூன் 11: இரண்டாவது சனி
ஜூன் 12: ஞாயிறு
ஜூன் 15: YMA தினம்/ குரு ஹர்கோவிந்த் ஜியின் பிறந்த நாள் / ராஜா சங்கராந்தி, ஐஸ்வால், புவனேஷ்வர், ஜம்மு, ஸ்ரீநகர்
ஜூன் 19: ஞாயிறு
ஜூன் 25: நான்காவது சனிக்கிழமை
ஜூன் 26: ஞாயிறு

Categories

Tech |