Categories
மாநில செய்திகள்

ஜூன் 10-ஆம் தேதிக்குள் TANCET முடிவுகள்…. வெளியான அறிவிப்பு….!!!!!!!

தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்விற்கான  விண்ணப்பங்கள் மார்ச் 30ஆம் தேதி தொடங்கி  ஏப்ரல் 18-ஆம் தேதி வரையில்  பெறபட்டுள்ள  நிலையில் எம்.பி.ஏ படிப்பிற்கு 21,557 பேரும், எம்.சி.ஏ படிப்பிற்கு 8,391 பேரும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்பிற்கு 6,762 பேரும் என மொத்தமாக 36,710 பேர் விண்ணப்த்திருக்கின்றனர்.

இவர்களுக்கு தேர்வுக்கான நுழைவுச்சீட்டு மே2 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டது. மேலும் எம்.சி.ஏ படிப்பிற்கு மே14 ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரையும், எம்.பி.ஏ படிப்பிற்கு மே 14 ஆம் தேதி மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்பிற்கு மே 15 ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரையும் நுழைவுத் தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில் இந்தத் தேர்விற்கான முடிவுகள் ஜூன் 10 ஆம் தேதிக்கு முன்னர் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் தமிழகத்தில் முதுநிலை பொறியியல் மற்றும் மேலாண்மை படிப்புகளில் சேருவதற்கு எழுதப்படும் துறைத்தேர்வுகள் மே 14ம் தேதி மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

Categories

Tech |