மகாராஷ்டிர மாநிலத்தில் ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜூன் 15ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வரும் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு புதிய வகுப்புகள் தொடங்க உள்ளது. இந்த வரிசையில் மகாராஷ்டிரா மாநிலத்திலும் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் போது ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் மற்றும் வேலைக்கு வந்தால் போதும் மாணவர்கள் இரண்டு நாட்களுக்கு பிறகு ஜூன் 15ஆம் தேதி முதல் பள்ளிக்கு வருவார்கள் என்று கூறப்பட்டது.
கொரோனா புதிய பாதிப்புகளின் தொடர்ச்சியாக அதிகரிப்பதன் காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு முன்பு, நோய்த்தடுப்பு நெறிமுறைகளை மேற்கொள்வதற்காக முதலில் ஊழியர்களை பள்ளிக்கு அழைக்க அரசு முடிவு செய்துள்ளது.பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் பள்ளி வளாகங்களை சுத்தப்படுத்துதல், வெப்பநிலை பரிசோதனைகள், முக கவசம் அணிதல் மற்றும் சமூக விலகல் உள்ளிட்ட அனைத்து வழிகளையும் பின்பற்றும்படி மாநில கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.