நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகள் கடந்த சில நாட்களாக கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. அதன்படி தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கி கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதங்களை 0.40 சதவீதமாக தற்போது உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் ஜூன் 13ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி அடிப்படை வட்டி விகிதம் 8.35 விழுக்காட்டிலிருந்து 8.75 விழுக்காடாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் BPLR விகிதம் 13.35 விழுக்காட்டிலிருந்து 13.75 விழுக்காடாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் கடன் வாங்கியோர் செலுத்தக் கூடிய EMI உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதால் பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது கரூர் வைஸ்யா வங்கியும் கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. கரூர் வைஸ்யா வங்கி வீட்டுக் கடன்களுக்கு 7.15% முதல் 9.35% வட்டி, தனிநபர் கடன்களுக்கு 8.70% முதல் 11.70% வட்டி விதிக்கிறது. நான்கு சக்கர வாகன கடன்களுக்கு 7.80% முதல் 8.10% வட்டி விதிக்கிறது. இருசக்கர வாகன கடன்களுக்கு 14% முதல் 16% வட்டி விதிக்கிறது. நகைக் கடன்களுக்கு 9.5% முதல் 10% வட்டி விதிக்கிறது.