இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு,வருகின்ற ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். இந்த கட்டுப்பாடுகள் இலிருந்து அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் கூறியிருப்பது, இந்த மாத இறுதிக்குள் 60 லட்சம் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் வருகின்ற 30-ஆம் தேதிக்குள் 2 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும். கர்நாடக மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தடை இல்லாமல் நடைபெற நடவடிக்கை எடுத்து வரும் பிரதமர் மோடிக்கு நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார்.