Categories
மாநில செய்திகள்

ஜூன் 14 முதல் தலைமையாசிரியர்கள், பணியாளர்கள் பள்ளிக்கு வர…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 1 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக அரசு அறிவித்தது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்க பட்ட நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது, உயர் கல்வி பயில்வதற்கான சான்றிதழ்கள் வழங்குவது சார்ந்த பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் அறிவித்தார். இந்நிலையில் மாணவர்களுக்கு 2021-2022 கல்வி ஆண்டுக்கான பாடத்தையும் தொடங்க உள்ள நிலையில் ஜூன் 14 ஆம் தேதி முதல் அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பள்ளிக்கு வரவேண்டும் என்ற பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குவது சார்ந்த பணிகள் நடைபெற உள்ளதால் மாணவர் சேர்க்கை ஆரம்பிக்கப்பட உள்ளதாலும் மற்றும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான இதர நலத்திட்டங்கள் வழங்க வேண்டி இருப்பதாலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் ஜூன் 14 ஆம் தேதி முதல் பள்ளிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Categories

Tech |