Categories
தேசிய செய்திகள்

ஜூன் 15 தான் கடைசி நாள்…. வருமான வரி செலுத்துவோருக்கு…. திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

வருமான வரி செலுத்துவோர் வருகின்ற ஜூன் 15ஆம் தேதிக்குள் அட்வான்ஸ் வரியை செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அப்படி ஜூன் 15ஆம் தேதிக்குள் அட்வான்ஸ் தொகையை செலுத்தாவிட்டால் அல்லது குறைவான தொகையை செலுத்தினால் வட்டி விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் பிடித்தம் போக வருடத்திற்கு பத்தாயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் வரி செலுத்த வேண்டியவர்கள் அனைவரும் அட்வான்ஸ் தொகையை கட்டாயம் செலுத்த வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் தொழில் மூலமாக வருமானம் பெறாத சீனியர் சிட்டிசன்களும் அட்வான்ஸ் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. தணிக்கைக்கு உட்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மின்னணு பரிவர்த்தனை மூலமாக அட்வான்ஸ் தொகையை செலுத்த வேண்டியது கட்டாயம். மற்றவர்களும் மின்னணு பரிவர்த்தனை மூலமாக அட்வான்ஸ் வரி செலுத்துவது சவுகரியமானது என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

அவ்வாறு அட்வான்ஸ் வரி செலுத்துவோர் அனைவரும் நிதி ஆண்டிற்குள் ஜூன், செப்டம்பர், டிசம்பர் மற்றும் மார்ச் என நான்கு தவணைகளாக செலுத்தலாம். அதன்படி முதலில் ஜூன் தவணையில் 15% அட்வான்ஸ் தொகையை செலுத்த வேண்டும். அதன்பிறகு மார்ச் மாதத்திற்குள் முழு அட்வான்ஸ் வரித் தொகையை செலுத்தி முடிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |