தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொத்தேர்வுக்கான புதிய அட்டவணையை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.
தமிழகத்தில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் பல்வேறு தரப்பிலிருந்தும் ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த நிலையில் தற்போது அமைச்சர் செங்கோட்டையன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றது என்று தெரிவித்தார்.
ஜூன் 15 ஆம் தேதியில் ஜூன் 25ஆம் தேதி வரை தேர்வு எழுதுவதற்காக அட்டவணை வெளியிட இருக்கிறோம் என்று தெரிவித்த அமைச்சர், 10ஆம் வகுப்பு பொத்துத்தேர்வு வகுப்பறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். மாநிலம் முழுவதும் 15 ஆயிரத்து 690 மையங்கள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:
ஜூன் 15 மொழிப்பாடம்
ஜூன் 17 ஆங்கிலம்
ஜூன் 19 கணிதம்
ஜூன் 20 விருப்பமொழி
ஜூன் 22 அறிவியல்
ஜூன் 24 சமூகஅறிவியல்
ஜூன் 25 தொழிற்கல்வி தேர்வுகள் என்று அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.