நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பொது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களின் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் மற்றும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட டெல்லி நிஜாமுதீன் – சென்னை சென்ட்ரல் இடையே ஆன ராஜதானி சிறப்பு ரயில் ஜூன் 16 முதல் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நிஜாமுதீனில் இருந்து புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பிற்பகல் 3.35 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரலுக்கு ரயில் வந்து சேரும் என தெரிவித்துள்ளது.