நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் பலனாக சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இருந்தாலும் கொரோனா பாதிப்பு முழுமையாகக் குறையும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று பல மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், ஜூன் 20ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும், கடைகள்காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் எனவும் பணிக்கு செல்வோர் மாலை 6 மணிக்குள் வீட்டிற்கு செல்ல கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.