தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிவடைந்த நிலையில், தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல் கட்டமாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும்இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன . மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் இன்று முதல் வழங்கப்படும். வாரத்திற்கு ஒரு நாள் பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் நடைபெறும் .மன ரீதியாக உளவியல் ரீதியாக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.