புதுச்சேரியில் வருகின்ற ஜூன் 23ஆம் தேதி முதல் புதிய கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை வருகின்ற ஜூன் 22ஆம் தேதி முடிவடையும் என்றும், 1 முதல் 10, 12 ஆம் வகுப்பு வரைமாணவர்களுக்கு ஜூன் 23 முதல் புதிய வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் 11ஆம் வகுப்பு புதிய மாணவர்களுக்கான விண்ணப்ப செயல்முறைகள் வருகின்ற ஜூன் 17ஆம் தேதி முதல் தொடங்கும். தற்போது புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான வாரிய தேர்வுகள் தமிழ்நாடு தேர்வு வாரியத்தால் ஏப்ரல் முதல் மே மாதங்களில். இந்த மாணவர்களுக்கான விடைத்தாள் மதிப்பீடு ஜூன் 1 முதல் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜூன் 22ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.