Categories
தேசிய செய்திகள்

ஜூன் 23 முதல் மீண்டும் விமான சேவை…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பொது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களின் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் மற்றும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் வரும் 23ம் தேதி முதல் இந்தியா, தென் ஆப்ரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளுக்கு மீண்டும் விமான சேவை இயக்க ஐக்கிய அரபு அமீரகம் முடிவு செய்துள்ளது. தங்கள் நாட்டிற்கு வருபவர்கள் 6 விதிகளை கடைபிடிக்கவேண்டும் என அமீரக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி ஏதாவது ஒரு தடுப்பூசியின் 2 டோஸ் செலுத்திக்கொண்டதற்கான சான்று கொண்டு வரவேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் 48 மணி நேரத்திற்குள் எடுத்த ஆர்டிபிசிஆர் சான்றும் வேண்டும் உள்ளிட்டவை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |