Categories
மாநில செய்திகள்

ஜூன் 27 ஆம் தேதி முதல்…. கல்வி தொலைகாட்சியில்…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!!!

தமிழ்நாடு அரசு, 2022-23ம் கல்வியாண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்படி, 2025ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் எழுத்தறிவும், எண்ணறிவும் பெறவேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எண்ணும் எழுத்தும் திட்ட மாதிரி வகுப்புகள் கல்வி தொலைக்காட்சியில் ஜூன் 27ஆம் தேதி முதல் ஒளிபரப்பப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், வாரம்தோறும் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும். மேலும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி இத்திட்டம் முறையாக செயல்படுவதை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |