Categories
மாநில செய்திகள்

ஜூன் 27 முதல் 10 நாட்களுக்கு…. ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக வாணியம்பாடி – கேதண்டபட்டி இடையே ஜூன் 27 முதல் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அரக்கோணம் – ஜோலார்பேட்டை பிரிவில் ரயில்வே பொறியியல் பராமரிப்பு பணி காரணமாக ஜூன் 27 முதல் ஜூலை 7 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு(வெள்ளி தவிர) ரயில் சேவையில் மாற்றம் செய்யப் படுவதாகவும் அறிவித்துள்ளது.

Categories

Tech |