தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து நிவாரண நிதியின் இரண்டாவது தவணையான 2000 ரூபாயுடன் 14 மளிகை பொருட்கள் அடங்கிய பொருள்களையும் வழங்கும் திட்டத்தை ஜூன் 3 முதல் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும், மற்ற மற்ற மாவட்டங்களில் ஜூன் 5 முதல் செயல்பாட்டுக்கு வருகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் 2.11 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவதாகவும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.