நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பொது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களின் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் மற்றும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தீவிரமானதைத் தொடர்ந்து இந்திய விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தற்காலிக தடை விதித்தன. இதனை அடுத்து இந்தியா மற்றும் ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ் அரசு தடை விதித்தது. தற்போது அந்த தடையை ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட இதர நாட்டு பயணிகளுக்கும் தடை தொடரும் என தெரிவித்துள்ளது.