தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் நோயை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், சலுகைகளையும் அறிவித்து வருகிறது.
அந்த வகையில் ஊரடங்கு காரணமாக நீட்டிக்கப்பட்ட மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு ஜூன் 15 கடைசி (இன்று) நாள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.