நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆந்திராவில் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூன் 30-ஆம் தேதி வரை அனைத்து கடைகளும் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.