Categories
தேசிய செய்திகள்

மேலும் 9 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு…. ஆந்திர அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திராவில் கடந்த மே-5 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையில் அடுத்தடுத்து ஊரடங்கு மூன்று முறை நீட்டிக்கப்பட்டது.

இதையடுத்து முந்தைய ஊரடங்கு 21ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தற்போது 9 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் சில கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி காலை 6 மணி முதல் 2 மணி வரை இருந்த தளர்வுகள் இனி மாலை 6 மணி வரை நீடிக்கும் என்றும், கடைகள் மாலை 5 மணி வரை திறக்கலாம் என்றும், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் அனைத்து ஊழியர்களுடனும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |