நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக பகுதிநேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு, முழு ஊரடங்கை பிறப்பித்து வருகின்றது. அந்தவகையில் கர்நாடகாவில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மே -10 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மீண்டும் இன்று முதல் அடுத்த மாதம் 7ஆம் தேதி வரை முழு ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். மேலும் ஊரடங்கு உத்தரவை கடுமையாக அமல்படுத்தவும், விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.