இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜூன் 9ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நாளை மற்றும் ஜூன் 7-ஆம் தேதி அத்தியாவசிய பொருட்கள் வாங்க மளிகை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தகக் கடைகளை நாளை ஒரு நாள் மட்டும் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு நீக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.