Categories
தேசிய செய்திகள்

ஜூலைக்குள் “ஒரே நாடு, ஒரே ரேஷன்” திட்டம்…!!!

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியாக ரேஷன் அட்டை வழங்கப்பட்டு அதன் மூலமாக மக்கள் நியாயவிலைக் கடைகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர். குடும்ப அட்டை மூலமாக அந்தந்த பகுதியில் உள்ள நியாயவிலைக்கடைகளில் வாங்கி கொள்ளலாம். இதையடுத்து புலம்பெயர் தொழிலாளர்கள், தினக்கூலிகள், தற்காலிக பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் தங்களுடைய ரேஷன் அட்டையை வைத்து வெளி மாநிலங்களில் வேலை செய்யும்போது வாங்க முடிவதில்லை என்பதன் காரணமாக ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை அமல்படுத்தும் திட்டம் இருந்தது.

இந்நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்தவும் அமைப்புசாரா மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விவரங்களை பதிவு செய்யவும் NIC உடன் கலந்தாலோசித்து ஒரு இணையதளத்தை உருவாக்க 31-ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கார்டு இல்லாமல் மத்திய அரசு எப்படி நவம்பருக்குள் புலம்பெயர் தொழிலாளர் களுக்கு உணவு பொருட்கள் வழங்கும்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளது.

Categories

Tech |