நடிகர் விக்ரமின் ‘சியான்-60’ படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை மாதம் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் கோப்ரா, சியான் 60, பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சியான் 60 படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரம் நடிக்கிறார்.
மேலும் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது. வருகிற ஜூலை மாதம் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில் ஒரே கட்டமாக சியான் 60 படத்தை முடித்துவிட விக்ரம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .