மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடுகமுத்தம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா , வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பானுமதி, வேளாண்மை இணை இயக்குனர் ராஜசேகர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ், தாசில்தார் சிவப்பிரகாசம், ஊராட்சி தலைவர் செல்லம்மாள், சரோஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா 172 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் 1.75 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மீண்டும் நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இதனால் வருகின்ற 30-ஆம் தேதி நமது மாவட்டத்தில் நடைபெறும் மகா தடுப்பூசி முகாமில் அனைவரும் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்த வேண்டும். மேலும் மாதந்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் 70 சதவீதம் பட்டா மாற்றம், இலவச வீட்டு மனை பட்டா போன்ற மனுக்கள் தான் அதிகளவில் வருகிறது. இதனையடுத்து ஜூலை மாதத்திற்கு முன்பாக தகுதி வாய்ந்த நபர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.