ஜூலை மாதத்தில் சமையல் எண்ணெய் வகைகள் விலை சராசரியாக 22 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மட்டும் அல்ல, குடும்பங்களின் அத்தியாவசியத் தேவையாக பயன்படுத்தப்பட்டுவரும் சிலிண்டர் மற்றும் சமையல் எண்ணெய்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றது. ஏற்கனவே ஊரடங்கு காரணமாக தங்களது வேலைகளை இழந்து பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு இது பேரிடியாக உள்ளது.
அந்த வகையில் ஜூலை மாதத்தில் மட்டும் சமையல் எண்ணெய் வகைகள் விலை சராசரியாக 52 சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் உள்ளிட்ட உணவு பொருட்களின் விலையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கச்சா பாமாயில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் ஆகியவற்றின் வரி 5-7.5% குறைக்கப்பட்டிருக்கிறது என கூறியுள்ளது.