நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மக்கள் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இந்த இக்கட்டான காலகட்டத்தில் மக்களின் சூழலை புரிந்துகொண்ட அரசு மட்டுமல்லாமல் பல்வேறு தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள் சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்தவகையில் புற்றுநோய்க்கான அனைத்து சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள், ஆலோசனைகளுக்கு ஜூலை மாதம் முழுவதும் கட்டணம் பெறப்போவதில்லை என்று ஜெம் மருத்துவமனை அறிவித்துள்ளது.
கொரோனா நிதி நெருக்கடியால் அவதிப்படும் மக்களுக்கு “ஜீரோ மருத்துவக் கட்டணம்” திட்டத்தின்கீழ் ஜூலை 31-ஆம் தேதி வரை புற்றுநோய் சிகிச்சை கட்டணம் இல்லை. மேலும் இது குறித்த விவரங்களுக்கு 904389492 1 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளது.