தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. தற்போது தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஜூலை முதல் வாரத்தில்சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜூலை 15 க்கு பிறகு திரையரங்குகளை திறக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனுமதி வந்தவுடன் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.