ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக ஒன்றிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.. பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட இயர் பட்ஸ், பிளாஸ்டிக் குச்சி பொருத்தப்பட்ட பலூன்கள், பிளாஸ்டிக் கொடி, ஐஸ்க்ரீம் குச்சிகள், அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படும் தெர்மாகோல், பிளாஸ்டிக் தட்டு மற்றும் கப், கத்தி, ஸ்ட்ரா, சிகரெட் அட்டைகள் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே வரும் ஜூன் 30ம் தேதிக்குள் மேற்குறிய பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பு, பூஜ்ஜியமாகி இருப்பதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அபராதம் விதித்தல், சுற்றுச்சூழல் இழப்பீடு விதித்தல், சம்பந்தப்பட்ட நிறுவனங்களை மூடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.