Categories
மாநில செய்திகள்

ஜூலை 1 முதல் அனுமதிச்சீட்டு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய ராணுவத்தின் பல்வேறு பதவிகளுக்கு 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 முதல் 24ம் தேதி வரை ஆட்தேர்வு முகாம் திருவண்ணாமலையில் நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னையில் ஜூலை 25 ஆம் தேதி பொது நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்வில் பங்கேற்பதற்கான அனுமதிச்சீட்டை ஜூலை 1 முதல் சென்னை கோட்டையில் உள்ள ராணுவ அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-25674924 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Categories

Tech |