தனியார் வங்கியான கர்நாடகா வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் பல்வேறு வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி வீதத்தை உயர்த்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது இரண்டு கோடி ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட்டுகளுக்கு வட்டி 0.10% உயர்த்தப்பட்டுள்ளதாக கர்நாடக வங்கி அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
புதிய வட்டி (2 கோடி ரூபாய்க்குள்)
1 ஆண்டு – 2 ஆண்டு : 5.25%
2 ஆண்டு – 5 ஆண்டு : 5.50%
இவ்விரண்டு கால வரம்புகளுக்கு மட்டுமே வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற வரம்புகளுக்கு பழைய வட்டியே நீடிக்கும்.
மற்ற வரம்புகள்:
7 – 45 நாட்கள் : 3.40%
46 – 90 நாட்கள் : 4.90%
91 – 364 நாட்கள் : 5%
5 – 10 ஆண்டுகள் : 5.50%
சீனியர் சிட்டிசன்களுக்கு:
1 – 2 ஆண்டு : 5.65%
2 – 5 ஆண்டு : 5.80%
5 – 10 ஆண்டு : 6%