நாடு முழுவதும் பெரும்பாலானோர் நீண்ட தூரம் பயணிப்பதற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதில் சௌகரியம் ஆகவும் குறைந்த கட்டணத்திலும் பயணிக்க முடியும் என்பதால் அதிக அளவிலான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதனால் ரயில் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய கட்டண சலுகைகளுடன் பல்வேறு புதிய அறிவிப்புகளை இந்திய ரயில்வே துறை அமல்படுத்த உள்ளது.
1). பயணிகளுக்கு இனி காத்திருப்பு பட்டியல் இருக்காது. அதற்குப் பதில் டிக்கெட் சுவிதா ரயில்களில் உறுதி செய்யப்பட்டு வழங்கப்படும்.
2). தட்கல் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் 10 அல்லது 20% வரை மட்டுமே கட்டணம் திருப்பி தரப்பட்டு வந்த நிலையில், தற்போது 50% வரை கட்டணம் திருப்பி தரப்படும்.
3). தட்கலில் AC டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் காலை 10 மணி முதல் 11 மணி வரையும் 2ம் வகுப்பில் பயணிக்க காலை 11 மணி முதல் 12 மணி வரையும் முன்பதிவு செய்யப்படும்.
4). 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 %, 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50% கட்டண சலுகை மீண்டும் நடைமுறைக்கு வருகிறது. மேலும் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்வே சலுகைகள் மீண்டும் அமலுக்கு வருகிறது.
5.)ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுத்தவர்களுக்கும், ரயிலில் ஏறும் நிலையத்தை 4 மணி நேரத்திற்கு முன்பு மாற்றும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக IRCTC இணையத்தில் போர்டிங் பாயிண்ட் சேஞ்ச் என்ற வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.
6). நல்லாசிரியர் மற்றும் கல்வித்துறைக்காகக் குடியரசுத் தலைவரிடம் விருதுபெறும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் வகுப்பில் 50% சலுகை வழங்கப்படும்.