Categories
தேசிய செய்திகள்

ஜூலை 1 முதல்… “இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு”… சம்பள உயர்வு அமல்…!!!

ஜூலை 1-ம் தேதி முதல் தொழில்நுட்ப நிறுவனங்களான விப்ரோ, இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு இரண்டாம் கட்ட சம்பள உயர்வை அறிவித்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பல ஐடி நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமத்திருந்தனர். ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட போதும் பல நிறுவனங்கள் இன்னும் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி வழங்கியுள்ளது. 2020-21 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் முக்கிய நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் பலருக்கும் வேலை வாய்ப்பு வழங்கியது.

அதுமட்டுமில்லாமல் ஊழியர்களுக்கு சம்பள உயர்வும் வழங்கியிருந்தது. ஏற்கனவே ஜனவரி 1-ஆம் தேதி முதல் சம்பள உயர்வு வழங்கப்பட்டது. மீண்டும் இந்த ஆண்டு இரண்டாம் கட்ட சம்பள உயர்வு ஜூலை 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்போசிஸ் நிறுவனம் இந்தியாவில் 19709 பணியாளர்களையும், வெளிநாட்டு பிரிவில் 1941 பணியாளர்களையும் புதிதாக நியமித்துள்ளது. இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதேபோல விப்ரோ நிறுவனமும் தங்களது ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்துள்ளது. 80 சதவீத பணியாளர்களுக்கு இந்த ஊதிய உயர்வு செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |