Categories
மாநில செய்திகள்

ஜூலை 1 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் மாற்றம்….. அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் குறிப்பாக பொது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களின் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் மற்றும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஜூலை மாதம் முதல் குளிர்சாதன வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் முன்பதிவு செய்ய காலை 10 மணி முதல் 11 வரையிலும், ஸ்லீப்பர் வசதி கொண்ட ரயில் பெட்டிகளில் முன்பதிவு செய்ய காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும் நேர ஒதுக்கீடு செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஜூலை மாதம் சுவிதா ரயில்களில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் மட்டுமே வழங்கப்படும். தட்கல் டிக்கெட் ரத்து செய்யப்படும் பொழுது 50 சதவீதம் கட்டணம் திருப்பி தரப்படும்.

Categories

Tech |