Categories
தேசிய செய்திகள்

ஜூலை 1 முதல் வகுப்புகள் ஆரம்பம்…. வெளியான அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி விட்டதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில்  மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் புதுச்சேரி ஜிம்பர் மையங்களில் மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் கொரோனா  பரிசோதனைக்கு பிறகே ஜிம்பர் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். விதிகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் இடை நீக்கம் செய்யப்படுவர் என்றும் எச்சரித்துள்ளது.

Categories

Tech |