நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 15ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். அதில் சலூன்கள் அழகு நிலையங்கள் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி. உடற்பயிற்சி கூடங்கள் 50% பேருடன் இயங்க அனுமதி. தனியார் மற்றும் கார்ப்பரேட் அலுவலகங்கள் 50 சதவீதம் ஊழியர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.